Thursday, February 25, 2016

இப்போது சொல்லுங்கள் எப்படி நேசிப்பேன் நான் இந்தியாவை..?

இந்தியன் என்ற உணர்வும், தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான். சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு. ஆனால்கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான்  நிலையில் குழம்பி வருகிறேன். 
காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாகமத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து  வருவதாக ஆழமாக நம்புகிறேன். இந்தியன்என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற  நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன்.

காரணங்கள்..!

                                                          நதிநீர் பிரச்சனைகள்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் தமிழகத்துக்கு வழங்கபடாத நியாயங்கள், பாலாறு, முல்லை பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்சினைகளில்  தமிழகத்தை வஞ்சித்தேவிட்டது மத்திய அரசு.

கச்சதீவு

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட  கச்சதீவுகச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கசெல்லும் தமிழக மீனவர்களை இலங்கை  ராணுவத்தினர் பிடித்து சென்று செய்யும் சித்ரவதைகள் இதனை பெரிதாக  கண்டுகொள்ளாதடெல்லி அரசுஇந்தியா என்னவோ துக்கடா நாடு போலவும் இலங்கை  ஒரு பெரிய சர்வாதிகார நாடு போலவும் தமிழக மீனவர்பிரச்னையில் தோன்றுகிறது. தமிழன் என்ற ஒரு காரணத்தாலேயே தமிழக மீனவர்கள் புறக்கணிக்க படுவதாகவும்  நினைக்கதோன்றுகிறது .

இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா
இந்திய அமைதி படையினர் இலங்கையில் தமிழ் மக்களின் மீது நடத்திய அத்து மீறல்கள்தான் நான் இந்தியனா..? தமிழனா..? 
என்றகுழப்ப விதையை என்னுள் விதைத்திருக்க கூடும் . 

என்
 தாய் நாட்டு ராணுவத்தினர் என் இன பெண்களை மானபங்க படுத்தினர் .
-------- 
இப்படி சொன்னால் அது அருவெறுப்பு.

என் தாய் நாட்டு ராணுவம் இலங்கையில் உள்ள பெண்களை மான பங்க படுத்தினர்.

----- 
இப்படி சொன்னால் ..? என் மொழி பேசும் மக்களை மூன்றாம் மனிதர்கள் போல சொல்ல  முடியாது
.

வேறு எப்படி சொல்லுவது..?

இந்திய ராணுவத்தினர் என் தமிழ் பெண்களை மானபங்க படுத்தினர்.
--- 
இப்படித்தான் சொல்ல முடிகிறது
இப்படி சொல்லும்போதே நான் இந்தியாவில் இருந்து விலகுகிறேன்.

தாய் மொழியா...? தாய் நாடா ..? 

இந்த கேள்விக்கே இடமில்லை தாய்மொழியே முதலிடம் வகிக்கிறதுநான் இந்தியன் என சொல்லிக்கொண்டு ஒரு மலையாளியையோஒரு கன்னடனையோஒரு  மராட்டியனையோ , நேசிப்பதை விட உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எந்தநாட்டு  குடிமகனாக இருந்தாலும் அவன் தமிழை தாய்மொழியாக கொண்டவனெனில்  அவனைத்தான் முதலில் நேசிப்பேன்இதுதான்இயற்கை.

நம்பிக்கை இழக்க வைத்த சில தமிழக அரசியல் வாதிகள்

ராமதாஸ் திருமா ஒரு கால கட்டத்தில் இவர்களில் யாரேனும் கைது செய்யபட்டுவிட்டாலேபோதும் விழுப்புரத்தை தாண்டி பஸ்,ரயில் ஏதும் ஓடாது..! மரம் வெட்டப்படும் பஸ்  கொளுத்தப்படும்ஆனால் இலங்கை தமிழர் பிரச்னையில் இவர்கள் சில  விளம்பரபோராட்டங்கள் மட்டுமே நடத்தினர்.மரம்வெட்டும் இவர்கள் இந்த விசயத்தில் ஒருசெடியை கூட புடுங்கவில்லை.

கலைஞர் உண்ணாவிரதம் இருக்கிறார்உடனே போர்நிறுத்த அறிவிப்பு வந்ததாக அவர்கள் தொலைகாட்சியில் செய்தி ..!
உண்ணாவிரதம் முடிகிறது.அதன் பின்னர் . பூவும் பிஞ்சுமாக ஆயிர கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்ய படுகிறார்கள் .

நம்பி நொந்து ஏமாந்ததுதான் மிச்சம் . 

இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய நிலைப்பாடும்,அதன் நடவடிக்கைகளுமே என்னை மிகவும் காயப்படுத்தி இந்திய உணர்வைநீர்த்துபோக செய்தது

இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறிய பலர் பல நாடுகளில் அந்த நாட்டு  குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர் ஆனால்தொப்புள் கொடி உறவு என சொல்ல படும் இந்தியநாட்டில் மட்டும் இலங்கை தமிழ் மக்கள் இன்னும் அகதி முகாமில் வசிக்கின்றனர்இதை  கேட்க நாதியில்லை..!

நடந்து முடிந்த போரில் இந்திய ராணுவ ஆயுதங்கள் இலங்கை தமிழ் மக்களை மட்டும்  கொல்ல வில்லை இந்தியாவில் இருக்கும்தமிழர்களில் இந்திய உணர்வையும் கொலை  செய்து விட்டது.


இப்போது சொல்லுங்கள் எப்படி நேசிப்பேன் நான் இந்தியாவை..? 
 


எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை.
எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
- உலகத் தமிழர்களின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.